Tuesday, June 2, 2009
ஹைய்யோ!!!
கொஞ்ச நாள் முன்னால சுஜாதாவின் ' கணையாழியின் கடைசி பக்கங்கள்' புத்தகத்தை படித்தேன். படிச்ச பிறகு தூக்கமே வரல.. என்னடான்னு பாதி தூக்கத்துல எந்திச்சு பாத்தா என்னென்னவோ தோணுது. சரி அதையே எழுத ஆரம்பிச்சுட்டேன், ஏதோ எழுதுனத வச்சு பிளாக்குல போடலாம்னு பாத்தா மறுநா பிளாக்கையே காணோம்.. கடவுளுக்கே பொறுக்கலனு அத தூக்கி போட்டுட்டேன்.
அத அப்படியே விட்டுட முடியுதா.. அதான் இப்போ புது பிளாக் ஆரம்பிச்சாச்சே..
இந்த பிளாக்குல போட்டுட்டேன்.. திட்டுறவுங்க எல்லாம் சுஜாதாவ திட்டிக்கோங்க...
******************************
++++++++++++++++++++++++
இறக்கைகளிருந்தும்
இயங்கிக்கொண்டிருந்தும்
பறக்க முடியாத மின்விசிறி
**********^^^^^^^^***********
வேலி தாண்டிய நிழல்
வெட்டப்பட்ட கிளை
எங்கள் வீட்டு வேப்பமரம்
**********^^^^^^^^***********
பறக்கும் காகிதம்
உதிராத எழுத்துக்கள்
உன் நினைவுகள்
***********^^^^^^^^**********
புழுதி பறக்கும் சாலை
புறப்பட்டு விட்ட பேருந்து
காத்திருக்கும் கால்கள்
**********^^^^^^^^^**********
..
லேபிள்
கவுஜ,
வரிசை தப்பிய வார்த்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கவிதை அனைத்தும் டாப் கிளாஸ்
பகிர்தல்! பகிர்தல்!!
அருமையான கவிதைகள்.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே
புதுசா எதனா இருக்கான்னு பார்க்க வந்தேன்...
விட்டு விட்டால் இனி ஒரு எழுத்திலேயே கவிதை எழுதிடுவாங்க போல....
எல்லாம் நச் .
@வசந்த்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்..
@பழமை பேசி,
நன்றி! நன்றி!
@கார்த்தி,
நன்றி கார்த்தி..
பழமைபேசியாரே,
உங்க கருத்து செறிவுள்ள இடுகையெல்லாம் படிச்ச பிறகு நானெல்லாம் பேசாம பின்னூட்ட பதிவராவே இருந்துறாலாமானு யோசிக்குறேன்..
அதுக்காக ரொம்ப சந்தோச பட்டுறாதீங்க.. உங்களையெல்லாம் சும்மா வுடுற எண்ணமில்ல..
@தமிழர்ஸ்,
முதல் பக்கத்தில் பப்ளிஷ் பண்ணியதற்கு நன்றிகள் பல..
@மயாதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//இறக்கைகளிருந்தும்
இயங்கிக்கொண்டிருந்தும்
பறக்க முடியாத மின்விசிறி//
இது சூப்பர்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்க்கி..
Post a Comment