Friday, June 12, 2009

சில்லறைத் தேடல்கள்

தொலைக்காட்சி
அலைவரிசைகளை
அலசும் துரத்தலில்..

இணைய அரட்டையின்
தட்டச்சில் உணர்விறக்கி
அவசரமாய் துடைத்தெறியும்
உறவு கதகதப்பில்..

புரட்டும் பக்கங்களில்
தேக்கிய ஆசைகளை
நீர்த்துவிடும் பாவனையில்..

கோவில் சிற்பங்களில்
திருநீறை தட்டிவிட்டு
விரைந்தோடும் பார்வையால்
விடைதேடி தாவுகையில்..

ஓடும்பேருந்தில்
சிறிதாய் பெரிதாய்
அழுத்தமுமாய்
உறுத்தும் உரசலில்..

சாலையில்,வாகனத்தில்
கடற்கரையில்,பூங்காவில்
கடக்கும் இணைகளை
தடவும் பெருமூச்சில்..

இன்னும்
ஆறுமாதமோ ஒருவருடமோ
முடிந்துவிடும்
இந்த சில்லறைத்தேடல்கள்
சில்லறைத்தட்டுப்பாடு
தீரும்போது..
இல்லாவிடில்
எனக்கான சில்லறை
உன்னால் தேடப்படும் போது..

..

11 comments:

கார்க்கி said...

:(((

Kanna said...

//எனக்கான சில்லறை
உன்னால் தேடப்படும் போது..//

:)

ரசித்தேன்

பழமைபேசி said...

உணர்வு மேலிடுதே? சபாசு!

தீப்பெட்டி said...

@கார்க்கி,
@கண்ணா,
@பழமைபேசி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..

பிரியமுடன்.........வசந்த் said...

சபாஷ்

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வசந்த்..

என் பக்கம் said...

நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)

//தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்.//

எங்கோ படித்தது: கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது.

இதில் தமிழ் கலாச்சாரம் என்பது தமிழ் சமுகத்தின் கடந்தகால வரலாறு/வாழ்வியல்முறை எனவும் சொல்லலாம்.

இதில் கலாசாரம்/பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக/இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. அதனால் அதன் பாதிப்பு/தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை)

ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல் கலாச்சார/பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்/தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.

நாம் இவற்றில் எதில் அதிகம் பதிக்க/வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம்.


//கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..//

கலாச்சாரம் அல்லது பண்பாடு இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் இறந்த காலத்தை குறிக்கவும், பண்பாடு என்ற வார்த்தையை நிகழ்காலத்தை குறிக்கவும் பயன் படுத்துகிறோம் என்பது என் கருத்து.


//பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்..
நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா?//

நாளைய கலச்சாரத்தை பற்றி யூகிக்கலாம் (தொலைநோக்கு பார்வையில்) நாளை பற்றி யோசிகாதிருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.


//இன்றைய கலாச்சாரம்/பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்..//

சத்தியமான வார்த்தைகள்........ ஆனால் இழிவாக சொல்ல இடம் கொடுக்ககூடாது என்பது என் கருத்து/எண்ணம்.


//இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை..//

நிகழ்காலத்தையே பார்க்க முடியாதவர்களால் கடந்த காலத்தை பற்றி யோசித்து என்ன பயன்.

கடந்தகாலத்தை பார்பதன் நோக்கம் முன் நிகழ்ந்த/நிகழ்த்தபட்ட தவற்றை திருத்தி புது விடிவு கண்பதற்க்கு என்பது என் கருத்து.

மீண்டும் நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)
உங்களிடமிருந்து இன்னும் நிறைய கருத்துகளை எதிர்பார்கிறேன்.

என் பக்கம் said...

இந்த பதிவின் பின்னூடங்களை ஒரு முறை படிச்சுபாருங்க

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

நன்றி

ஷண்முகப்ரியன் said...

சில்லறைத் தேடல்கள்//

தலைப்பில்தான் சில்லறை இருந்தது.
கவிதை ரொக்கமாக இருந்தது.
வாழ்த்துகள்,கணேஷ்குமார்.

தீப்பெட்டி said...

@ ப்ரதீப்(என் பக்கம்),
படிச்சுட்டே தான் வரேன்.. அதையெல்லாம் தொகுத்து தனி பதிவா போட்டீங்கன்னா நிறைய பேரு படிக்க இலகுவா இருக்கும்.. நேரம் இருப்பின் செய்யவும்..

@ ஷண்முகப்பிரியன்,
தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது..
பின்தொடர்வதற்கு நன்றி..

இரா.சிவக்குமரன் said...

good one

Post a Comment