Saturday, May 30, 2009

32 கேள்வி பதில்கள் - தொடர் பதிவு


இந்த தொடர்பதிவை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், எனக்கு தொடர வாய்ப்பளித்த நண்பர்கள் லோகு, கண்ணா வுக்கும் நன்றிகள்...

1.
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வீட்டுல அப்பா,அம்மா,பாட்டி,அத்தை எல்லாம் கூடிப்பேசி 'செந்தில்கணேஷ்'னு பேர்வைக்கலம்னு முடிவு பண்ணி கோயிலுக்கு போயாச்சு. ஆனா அங்க போயி அய்யர் அர்ச்சனை பண்ணும் போது பேரு என்னனு கேட்க அப்பாவுக்கு பேர் மறந்து போச்சு. கொஞ்சநேரம் யோசிச்சுட்டு கணேஷ்குமார்னு சொல்லிட்டார். அய்யரும் கணேஷ்குமாருங்குற பேருல அர்ச்சனை பண்ணிட்டார். அப்புறம் அதே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டாங்க.

என்னோட பேரு பிடிக்கும் (சுத்தமான தமிழ் பேரு வச்சுருக்கலாம்னு முன்னாடி நினச்சுருக்கேன்)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நினைவில்லை. ( கல்யாணம் பண்ணாததுதான் காரணம்னு நினைக்குறேன்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும், ஆனா மத்தவுங்களுக்கு என் கையெழுத்து பிடிக்கவே பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தமிழ்நாட்டு சமையல் எதுனாலும் சரி தான்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுல நான் கொஞ்சம் ஸ்லோ தான். நட்பு வட்டம் குறைவுதான். நண்பர்களை விரும்புவேன் ஏனோ பெரும்பாலான நட்பை நானாக ஆரம்பித்ததில்லை ...
(நட்பை பெறுவதில் நிதானமாய் இரு, பெற்றபின் உறுதியாய் இரு..- எங்கயோ எப்பவோ படித்தது..)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில் குளிக்குறதுதான் ஆனந்தம்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தைதான்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் : எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பா இருக்கனும்னு நினைக்குறது
பிடிக்காத விஷயம்: எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பு காட்ட முடியாதது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த/பிடிக்காத விசயம் ரெண்டும் ஒரே விசயம் தான். அது இன்னமும் அவுங்கள அடையாளம் காட்டாம கண்ணாமூச்சி ஆடுறதுதான்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
முத்து - பள்ளித்தோழன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட், பிஸ்கட் கலர் டீசர்ட் (இந்த கேள்வி இருக்குனு தெரிஞ்சே இந்த டிரஸ்ஸ போட்டேனாக்கும்)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் சத்தத்தை கேட்டுக்கிட்டே தட்டுறேன்..
பாக்குறது சிஸ்டம் மானிட்டரத்தான்..( ஐயோ.. அடிக்க வராதிங்க)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்..

14.பிடித்த மணம்?
செண்பகப்பூ மணம்: கல்லூரி விடுதியிலிருந்து தொடர்ந்து வரும் மணம்
மண் வாசனை: மழை கால பரிசு
பிஸ்கட் வாசனை: சின்ன வயசுத் தேடல்(?)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அப்பாவி முரு: உண்மைய உரக்க சொல்லும் இவரது நேர்மையும், தொனியும் எனக்கு பிடிச்சது. அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

வெங்கி ராஜா: இவரோட எழுத்துக்களைப் பாத்தா வியப்பாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

ஜெகதீசன்: கல்லுரித் தோழர்.. யதார்த்தமா எழுதுற இவர் நான் பதிவெழுத ஒரு முக்கிய காரணம். இவரை அழைக்க காரணம் இவர் யாரை அழைக்கிறார்னு தெரிஞ்சுக்க தான்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
லோகு: அழகிய தமிழ் மகன் இவன் - விஜய் ரசிகனாய் இருந்தாலும் இந்தப் பதிவு என்னை ரசிக்கவே வைத்தது ( கார்க்கி மன்னிக்க ;) )

கண்ணா: உறங்காத விழியில் இறக்காத கனவுகள்

17. பிடித்த விளையாட்டு?
ரம்மி ( ராஜா ராணி ஜாக்கி.. வாழ்வில் என்ன பாக்கி..)

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.. சின்ன வயசில கண்ணாடி போடனும்னு ஆசை இருந்தது.. இப்போ டாக்டர் கண்ணாடி போட சொல்லி 3 மாசம் ஆகுது.. இன்னும் போடல.. சீக்கிரமே போடுவேன்..

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவையான படம் (அதுக்காக பிளேடு போடக்கூடாது)

20.கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம்..(தெரியாத்தனமா பாத்துட்டேங்க என்ன பண்றது.. விதி வலியது :(

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( பத்து நாளா இந்த புத்தகம் இருக்கு.. இப்போ எல்லாம் முன்ன மாதிரி படிக்க முடியல.. வயசாகுதோ.. கடவுளே..)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போவாது சிஸ்டத்துல எந்த வேலையும் இல்லாம போரடிச்சா எதாவது இயற்கை காட்சியா கூகிளாண்டவர்கிட்ட தேடி போடுவேன்..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: பக்கத்து வீட்டு பாட்டுச்சத்தம்
பிடிக்காத சத்தம்: ஹாரன் சத்தம் தான்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமீரகம்..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அததான் பாஸ் நானும் தேடிட்டு இருக்கேன்..(இருந்தாதான கிடைக்குறதுக்கு)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மத்தவங்கள மட்டம் தட்டுறத என்னால ஏத்துகவே முடிந்ததில்லை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம்கூட கவலைபடாதது...

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
சதுர கிரி - திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற ஒரு மலைக்கோவில். நல்ல இடம். இயற்கை காட்சிகளைப் பாத்தாலே மனசெல்லாம் நெறஞ்சுரும். அடிக்கடி போக தூண்டும் இடம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நாலு பேரு மதிக்கிறாப்புல..

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதயெல்லாம் தான் நான் இப்போ பண்ணிட்டு இருக்கேன்..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நம்பிக்கை..

14 comments:

பழமைபேசி said...

நம்பிக்கை! வாழ்த்துகள்!!

Kanna said...

தொடர்பதிவுக்கு நன்றி..

உங்களை பற்றி நிறைய அறிய முடிந்தது..

நீங்கள் இப்போது அமிரகத்திலா இருக்கிறீர்கள்..?

நாங்கள் பதிவர் சந்திப்பு நடத்தலாமா என ஆலோசித்து வருகிறோம்.

நீங்கள் அமிரகத்தில் இருந்தால் தெரியபடுத்தவும்..

என் அலைபேசி எண்: 050 9253270

லோகு said...

வழக்கம் போலவே புரட்சிகரமா எழுதிட்டீங்க..
அழைப்பை ஏற்று கொண்டதற்கு நன்றி..
பல பதில்கள் என்னோடு ஒத்து போவது மகிழ்ச்சி..

வெங்கிராஜா said...

அழைத்ததற்கு நன்றி... இன்னைக்கு சாயங்காலம் கடைசி பரீட்சை இருக்கு.. முடிச்சிட்டு வந்து போட்டுடுறேன்! நக்கலா எழுதியிருக்கீங்க... நன்று!

கார்த்திகைப் பாண்டியன் said...

தீப்பெட்டி பற்றி நிறைய புதிய விஷயங்கள்.. நன்று..

முக்கோணம் said...

//செண்பகப்பூ மணம்: கல்லூரி விடுதியிலிருந்து தொடர்ந்து வரும் மணம்
மண் வாசனை: மழை கால பரிசு //

அருமையான வரிகள்..! வாழ்த்துக்கள்..

தீப்பெட்டி said...

@ பழமைபேசி
வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்..

@கண்ணா ,
வருகைக்கு நன்றி..
நான் அமீரகத்தில் இருந்தது 6 மாதங்களுக்கு முன்பு..
இப்போ சென்னை வாசம்..

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்..

தீப்பெட்டி said...

@லோகு ,
வருகைக்கு நன்றி..
//புரட்சிகரமா எழுதிட்டீங்க..//
என்ன பாஸ் இது இப்படி எல்லாம் திட்டக்கூடாது..

@வெங்கி ராஜா,
அழைப்பை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி..

//நக்கலா எழுதியிருக்கீங்க...//
நக்கலெல்லாம் இல்லீங்கோ...

உண்மையிலேயே நல்லா எழுதுறீங்கோ..

தீப்பெட்டி said...

@ கார்த்திகை பாண்டியன்
@ முக்கோணம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்...

Suresh said...

//நினைவில்லை. ( கல்யாணம் பண்ணாததுதான் காரணம்னு நினைக்குறேன்)
/

ஹா ஹா அப்புறம் அனைத்து கேள்விகளும் சூப்பர்

நீங்கள் அழைத்த நம் நண்பர்கள் முருகு

//பிடித்த சத்தம்: பக்கத்து வீட்டு பாட்டுச்சத்தம்//

எதாச்சும் பீகரு இருக்கா இப்படி பீட்டு போடுறிங்க :-)

Suresh said...

வெங்கி ராஜா, முரு, ஜெகதிசன் முவருக்கும் வாழ்த்துகள்

ஜெகதிசன் பதிவை இனி படிக்கிறேன்

ஜெகதீசன் said...

கணேஷ்,

அழைத்தமைக்கு நன்றி.

நானும் தீவிரமாகவே யோசித்துப் பார்த்தேன், யாரை அழைப்பதென்றே தெரியவில்லை! உன்னைத்தவிர என் நண்பர்கள் எவரும் வலைத்தளத்தை அதிகம் உபயோகிப்பதில்லை. மற்றவர்கள் தளத்தில் நான் நட்பு பாராட்டியதுமில்லை :(

இருப்பினும், "என்னைப் பற்றி" பக்கத்தில் கேள்விகளின் ஒரு பாகத்தை சேர்க்கலாமென்றிருக்கிறேன்.

ஜெகதீசன்.

கலையரசன் said...

பதில்களில் நேர்மை தெரியுதுங்கோ...
நல்லாயிரு்க்கு!

தீப்பெட்டி said...

@சுரேஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்..

@ஜெகதீஷ்,
அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..

@கலையரசன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை..

Post a Comment