Saturday, June 20, 2009

மாம்பழத்து வண்டு

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே என்ன பதிவு போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ அறையில் நண்பன் வாங்கிவந்த மாம்பழம் 'எனக்கென்ன குறைச்சல் என்ன பத்தி போடக்கூடாதா'னு கோவத்துல ஒரு ஓரத்தில சிவந்து சொன்னது. நிஜமாத்தானா! மாம்பழம் பேசுதானு யோசிச்சா!?

'ஏன் பேசக்கூடாதா.. நேத்து வந்த கணினி கூட நீ பேசிட்டு இருக்குறப்போ.. மழை தோன்றி மனிதன் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மாம்பழம் நான் பேசக் கூடாதா..'னு சத்தம். சொன்னா நம்ப மாட்டீங்க. சத்தம் போட்டுகிட்டே அலமாரில இருந்து கீழ விழுந்து உருண்டு வந்து கணினி பக்கத்துல உக்காந்துருச்சு.

'மாம்பழம் தமிழர்களோட முக்கனில முதல்கனி. உன்னப் பத்தி பதிவு போடாம வேறென்ன பணி'னு ஆரம்பிச்சுட்டேன்.

'நீ பதிவு போட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல. இந்திய அரசாங்கம் 'தமிழ செம்மொழி'னு அறிவிச்ச மாதிரிதான். உனக்கு வேணா அதனால பெருமையா இருக்கலாம், பின்னாடியே கன்னடம், தெலுங்கு எல்லாம் செம்மொழினு அறிவிச்ச மாதிரி நீயும் வாழப்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம்னு பதிவப் போடுவ'-இது மாம்பழம்தான்.

என்ன எகத்தாளம்! அட மாம்பழமே, தமிழ செம்மொழியாக்கின தலைவருக்கு ஓட்டு போட்ட மாதிரி உன் பதிவுக்கு எனக்கு யாரவது ரெண்டுபேரு ஓட்டு போடமாட்டங்களா?

'போட்டுட்டாலும் அத நீ வாங்கிட்டாலும்.. கார்க்கி மாதிரி 2 லட்சம் ஹிட்ஸ் வாங்கப் போறியா? இல்ல.. வெங்கி மாதிரி சங்கமம் போட்டில முதல் பரிச வாங்கப் போறியா? ஒரு மண்ணும் இல்ல. இருந்த ஒரு பிளாக்கையும் தொலச்சதுதான் மிச்சம்'-சந்தேகமென்ன இது மாம்பழம் சொன்னதுதான்.

என்னடா இது, ஆப்பிள்னு கூட ஒரு கணினி நிறுவனம் இருக்கு; மாம்பழம்னு ச்சி.. mangoனு எதுமில்லையே.. இம்புட்டு அறிவு இதுக்கு எப்படினு யோசிக்குறதுக்குல்ல.. யோசிக்கவிடுதா அது..

'என்ன இந்த கவிஞர்கள் படுத்துறபாடு போதாதுனு நீ வேற பதிவு போட்டு படுத்த போறியா'

'அட மொழு மொழு மாம்பழமே உன்ன கவிஞர்கள் காதலோட பாடுறாங்க அது பிடிக்கலயா'

எவன்யா காதலோடு பாடுறான்? எல்லாரும் காமத்தோட தான் பாடுறாங்க.
மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்னு ஒரு பாட்டு..
தென்னந்தோப்புல நின்னுட்டு இருந்தாலும் 'மாந்தோப்பில் நின்றிருந்தே'னு ஒரு பாட்டு..
ரெண்டயும் விட்டா நான் மார்க்கெட்டுக்கு போகாம இருக்குறத பத்தி பாடுறது..
எதுமே இல்லட்டா என்ன தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுறது..
நான் கேட்டேனாயா உங்ககிட்ட..

பேசு மாம்பழமே பேசு.. 'கககபோ' கட்சியின் சின்னமாய் இருந்துக்கிட்டு நீ இதுகூட பேசலனா எப்படி? விட்டா சிகரெட் பிடிச்சுட்டு மாம்பழம் தின்னுறாங்க மகாபாவிகள்னு சொல்லுவ போலயிருக்கே..

சொன்னாத்தான் என்ன தப்பு? அவ்வளவு ஏன்.. நீ என்னைக்காவது என்ன காதலோட வேணாம்.. பழமா பாத்துருக்கியா.. காமப்பார்வதான் பாக்குற..

போதும் போதும் நிறுத்து.. என் பிளாக்குன்னு ஒரு வரையறை இருக்கு.. அதுக்குமேல போடமுடியாது..

அதான் தெரியுமே உன் யோக்கியத.. சில்லறைத் தேடல் பதிவ படிச்சப்பவே..

அடக்கடவுளே! இது வேறயா.. சரி சரி ஒரு சமாதானத்துக்கு வருவோம்.. நான் உன்னப் பத்தி உயர்வா ஒரு பதிவு போடுறேன்.. ஆனா ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும்..

அதான; உனக்கு கேட்கத்தான தெரியும்.. நீ என்னைக்கு பதில் சொல்லியிருக்க. பயப்படாம கேளு..

அட வண்டு குடைஞ்ச மண்டு மாம்பழமே! சில்லறைத்தேடல தேடிப் படிச்ச நீ 32 கேள்வி பதில்கள படிக்கலயா? சரி விடு.. திருவிளையாடல் படத்துல ஞானப்பழம்னு உன்னத்தான் காட்டுவாங்க.. நீ தான் ஞானப்பழமா?

இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்ல..அடுத்து என்ன கேட்பனு எனக்கு தெரியும்.. ஞானப்பழத்துக்கு கொட்டையிருக்கானு கேட்ப..உன்ன சொல்லி குத்தமில்ல.. எல்லாம் தமிழ் சினிமாவச் சொல்லணும்..

தகப்பன குத்தஞ்சொன்னாலும் பொறுத்துக்கலாம்.. தமிழ் சினிமாவ குத்தம் சொன்னா பொறுக்குமா தமிழ் மரபு? பொங்கியெழுறதுதான தமிழர் சம்பிரதாயம்.. பொங்கியெழுந்துட்டேன்.. அதாங்க மாம்பழத்த சாப்பிட்டுட்டேன்..

சாப்பிட்ட பிறகுதான்.. மனசுக்குள்ள சின்னதா ஒரு கேள்வி உறுத்திக்கிட்டே இருந்தது.. அதான் இப்போ கேட்குறதுக்கு மாம்பழம் இல்லையே.. உங்க கிட்டயே கேட்டுடுறேன்..

கொட்டையில்லா திராட்சை மாதிரி கொட்டையில்லா மாம்பழம் எங்க பாஸ் கிடைக்கும்?

'எங்க கிடைச்சாலும் நீ சொந்தமா காசு போட்டு வாங்கி திங்க போறதில்ல.. ஓசி மாம்பழத்துக்கு ஒரு பதிவா?' - இது வயித்துக்குள்ள போன மாம்பழத்தோட வாய்ஸ் இல்லீங்க; மாம்பழம் வாங்கிட்டு வந்த நண்பன்.

.

26 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கடைசியில அந்த மாம்பழத்த சாப்பிட்டீங்களா இல்லயா?

தீப்பெட்டி said...

அதான் சாப்பிட்டுட்டேனு சொல்லிட்டேனே பாஸ்..
பதிவ முழுசா படிக்குறதுக்குள்ள பின்னூட்டமா..
பதிவு அவ்வுளவு கொடுமயாவா இருக்கு..
அ..வ்வ்வ்வ்:((

அப்பாவி முரு said...

தகப்பன குத்தஞ்சொன்னாலும் பொறுத்துக்கலாம்.. தமிழ் சினிமாவ குத்தம் சொன்னா பொறுக்குமா தமிழ் மரபு?

பொங்கியெழுறதுதான தமிழர் சம்பிரதாயம்.. பொங்கியெழுந்துட்டேன்.. //
பாலா இருந்தா பொங்கும், பச்சதண்ணி எப்பிடி பொங்கும்?

தீப்பெட்டி said...

//பாலா இருந்தா பொங்கும், பச்சதண்ணி எப்பிடி பொங்கும்?//

எனக்கு பால் போல வெள்ளை மனசுனா உங்களுக்கு பொறுக்காதே..
சரி விடுங்க.. பச்ச தண்ணியாவே இருந்துட்டு போறேன்(அய் இதுல கூட பச்சை இருக்கே)

;))

ஆ.ஞானசேகரன் said...

//போட்டுட்டாலும் அத நீ வாங்கிட்டாலும்.. கார்க்கி மாதிரி 2 லட்சம் ஹிட்ஸ் வாங்கப் போறியா? இல்ல.. வெங்கி மாதிரி சங்கமம் போட்டில முதல் பரிச வாங்கப் போறியா? ஒரு மண்ணும் இல்ல. இருந்த ஒரு பிளாக்கையும் தொலச்சதுதான் மிச்சம்'-சந்தேகமென்ன இது மாம்பழம் சொன்னதுதான்.//

நான் இல்லப்பா

ஆ.ஞானசேகரன் said...

//கொட்டையில்லா திராட்சை மாதிரி கொட்டையில்லா மாம்பழம் எங்க பாஸ் கிடைக்கும்? //

இல்ல என்றே நினைக்கின்றேன்

தீப்பெட்டி said...

வாங்க ஞானசேகரன்,

இப்படி வந்து பின்னூட்டம் போட்டுட்டு நான் இல்லனு சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்? எப்படி கண்டுபிடிச்சேன் பாத்திங்களா!
;)

//இல்ல என்றே நினைக்கின்றேன்//
ஆமா இந்த வேளாண் விஞ்ஞானிகளெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்காங்க.. இத கண்டு பிடிக்காம..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீங்க தொலைக்காட்சி விளம்பரம் சரியா பாக்கறதில்லேன்னு நினைக்குறேன்.. கொட்டையில்லாத மாம்பழம் MAAZA!!!

தீப்பெட்டி said...

அப்படியா பாஸ்..

மாஸா விளம்பரத்துல நான் அந்த பொண்ண மட்டும்தான் பாக்குறது.. அவுங்க சொல்லுறதெல்லாம் எங்க காதுல விழுது?

ஆமா உங்க பேர சொல்லுறதுல உங்களுக்கு குறையொன்றுமில்லைனா சொல்லுங்களேன்.. (உங்க profile-கூட பாத்தேன் பேர் போடலியே)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க அதான் ராசகுமாரன்னு போட்டிருந்தேனே...

குறை ஒன்றும் இல்லை !!! said...

மன்னிக்சுக்கோன்ங்க நான் தப்பா சொல்லிட்டேன்..
என் பேர் போடல..

தீப்பெட்டி said...

பதிவ முழுசாப் படிச்சுட்டு கேள்விக்கு பதிலயும் சொன்னதுக்கு நன்றி ராசகுமாரன்

குறையொன்றுமில்லாத நல்ல பேரு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

அய்யயோ.. நீங்க தி மு க வா?
நான் அம்பேல்...

ஷண்முகப்ரியன் said...

உண்மையாகவே நன்றாக் இருந்தது,ஆனல் உங்கள் பதிவை நீங்களே நையண்டி பண்ண விட்டதால் அதன் மாற்றுக் குறைந்தது,கணேஷ்.

தீப்பெட்டி said...

@ராசகுமாரன்,
//நீங்க தி மு க வா?//

நான் தி.மு.க இல்லீங்க.. கலைஞர் திருகுறளுக்காக சிலையும் கோட்டமும் கட்டியதால் ஒரு மரியாதை உண்டு..
குறள் நாயகனாக முதலில் அவர் செஞ்ச நல்ல விசயத்த சொல்லலாமேனு தான் அது..
குறள் நாயகன் மாறிக்கொண்டே இருப்பார்..

நான் எந்த கட்சினு எனக்கே தெரியாது.. (இதை பஞ்ச் டயலாக் போல படிக்கவும்)

தீப்பெட்டி said...

நன்றி ஷண்முகப்ரியன் சார்,
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடடா..

எழுதறதுக்கு மேட்டரே இல்லைன்னு அலைஞ்சிட்டிருக்கோம்..

அதுக்காக இப்படியா..?

தம்பி தீப்பெட்டி..

இப்பல்லாம் மாம்பழத்தை கார்பைட் வைச்சு சூடாக்கி பழுக்க வைககுறாங்களாம்.. பார்த்துப்பா.. வயித்துல கார்பைட் நுழைஞ்சுரப் போகுது..!

தீப்பெட்டி said...

வாங்க உண்மைத்தமிழன் சார்,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

//இப்பல்லாம் மாம்பழத்தை கார்பைட் வைச்சு சூடாக்கி பழுக்க வைககுறாங்களாம்.. பார்த்துப்பா.. வயித்துல கார்பைட் நுழைஞ்சுரப் போகுது..!//

என்ன பண்ணுறது சார்.. ஆசைய அடக்க முடியலயே..

லோகு said...

மாம்பழத்தை கிண்டல் செய்த உங்கள் தளத்தை தார் பூசி அழிக்கும் போராட்டம் விரைவில்...

jackiesekar said...

விட்டத்தை பாத்து எதையாவது யோசிச்சிட்டே இருப்பிங்க போல இருக்கு....

சப்ராஸ் அபூ பக்கர் said...

////கொட்டையில்லா திராட்சை மாதிரி கொட்டையில்லா மாம்பழம் எங்க பாஸ் கிடைக்கும்? /////

நம்ம ஊர்ல ஒரு காலம் இருந்ததா சொல்றாங்க.....(லொள்ளு.....)- அவங்கள்ட சொல்லிவிடுங்க.....

அப்புறம் எங்க ஊர் பக்கம் வர மாட்டீங்களா????

வேத்தியன் said...

மாம்பழக் கதை சூப்பரு ராஜா...
:-)

கார்க்கி said...

enakkum mambazahamna usuru..

sagaa, side barla irukira vijay albim thoda html code mail panna mudiyuma? namma bloglayum podanum.. nalla irukku

தீப்பெட்டி said...

@லோகு,
@ஜாக்கி,
@சப்ராஸ் அபூ பக்கர்,
@வேத்தியன்,
@கார்க்கி,
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சகா, HTML code Mail பண்ணியாச்சு..

sgramesh said...

ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு கருத்துரைகளை எப்படி படிக்கனும்னு இப்பதான் தெரியும். உங்கள் வருகைக்கு நன்றி.

sgramesh said...

ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு கருத்துரைகளை எப்படி படிக்கனும்னு இப்பதான் தெரியும். உங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆதரியுங்கள்.

Post a Comment