Wednesday, May 27, 2009

பார்வைகள்..

அந்த பையனுக்கு 13 இல்ல 14 வயசு இருக்கும், எல்லாரோட பார்வையும் அவன் மேலயும் அவுங்க அம்மாமேலயும் தான். அவன் அவுங்க அம்மாவ 'சும்மா இரும்மா.. விடும்மா..எல்லாரும் பாக்குறாங்க..'னு சொல்லிகிட்டே கைய பிடிச்சுகிட்டு இழுத்துகிட்டு இருந்தான். கருப்பா குட்டையா தலையில் போட்ட ஒத்தை கொண்டையோடு ஒடிந்துவிடும் உடல்வாகு அந்த அம்மாவுக்கு. அந்த அம்மாவோ விடுற மாதிரி தெரியல. எப்டி விட முடியும்? அந்த அம்மாவோட புருசன் குடிச்சுட்டு வந்து அந்த அம்மாவ கெட்ட வார்ததைல திட்டிகிட்டு இருந்தான்.

'ஏண்டி..கண்டவன் கூட போய் படுத்து தே***யா தனமா பண்ணிட்டு இருக்க.. அவன வீட்டுல வச்சுகிட்டு கூத்தடிச்சுட்டு இருக்குற.. உன்னையும் அவனையும் கண்டதுண்டமா வெட்டிட்டுதாண்டி மறு வேல...'
அதுக்கு மேல அவன் சொன்னது எல்லாம் இங்க சொல்ல முடியாத வார்த்தைகள்..

கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பாத்த அந்த அம்மாவால தாங்க முடியாமத்தான் கத்தினாள்.
'ஆமாண்டா அப்படித்தான் அவன் கூட படுப்பேன். உனக்கென்ன? ரெண்டு பச்ச புள்ளைங்கள என்கூட தனியா விட்டுட்டு கூடி கூத்தியானு சுத்திகிட்டு இருந்த! என்னையும் எம்புள்ளைகளையும் அடிச்சது பத்தாதுனு ஊருல இருக்குறவன யெல்லாம் அடிச்சுட்டு ஜெயில்ல வருசம் ஆறுமாசம் குடியிருப்ப.. பிள்ளைகள பட்டினியா போட்டுட்டு நீ வப்பாட்டி வீட்டுல குடியிருப்ப..

இப்போ அவ புருசன பக்கதுல இருந்த ஆளுங்கயெல்லாம் பிடிச்சு போக சொல்லிகிட்டு இருந்தாங்க..
..த்தா என்ன திமிரா பேசுறா பாரு.. புருசங்கிற மரியாத இருக்கா.. உன்னையெல்லாம் ரெண்டா வகுந்து கருவறுக்கணுன்டி...கண்டா****.

'அறுப்படா அறுப்ப.. பொட்டப்பயலே.. கட்டுன பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் கஞ்சி ஊத்தாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா.. உன் கண்ணு முன்னாடியே அவன்கூட படுப்பேன்டா.. உன்னால என்னடா பண்ண முடியும் பொட்டப் பயலே..'

நல்ல வேளையா அப்போ திருநெல்வேலி பஸ் வந்தது. என்னோட பெரிய பேக்கோட நான் எறினேன். அந்த பையனும் அம்மாவும் ஏறினாங்க. வேற யாரும் ஏறல.. அந்த அம்மா ஜன்னலோரமா சேல தலப்பால வாய பொத்திகிட்டு மௌனமா எங்கியோ பாத்துகிட்டு அழுதுட்டு இருந்துச்சு.

அந்த பையன் தான் டிக்கெட் வங்கினான். 'ரெண்டு திண்னவேலி' வாங்கிட்டு திரும்பும் போது என்னைப்பாத்த பார்வை இருக்குதே..அவமானத்தால் கூனி குறுகி போன அந்த அலட்சியபடுத்த முடியாத பார்வை... ஏண்டா அவுங்கள பாத்தோமுனு என் மேலயே எனக்கு கோவம் வந்துச்சு.

கண்டக்டர் வந்தார்,' எங்க போகணும்?' என்கிட்ட கேட்டார். 'தம்பி, கள்ளிப்பட்டி வந்துருச்சா, வந்தா என்ன மறக்காம எறக்கி விட்டுருப்பா..' இது பக்கத்தில் இருந்த பெரியவர். ' மூட்ட முடிச்செல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கோ.. கள்ளிப்பட்டி வரப்போகுது, ஆமா நீங்க எங்க போகணு சார்'

'கள்ளிப்பட்டி ஒண்ணு'

'யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க.. கள்ளிப்பட்டி போணுன்னா டவுன் பஸ்ல ஏறவேண்டிதான.. திருநவேலி போற ரூட் பஸ்ல ஏறி உயிர வாங்குறீங்க.. கள்ளிப்பட்டிக்கெல்லாம் டிக்கெட் போட முடியாது..'

'சார் எனக்கு கள்ளிப்பட்டிதான் இறங்கணும்!.. அதான் இந்த தாத்தா எறங்குறார்ல நானும் எறங்கிக்குறேன்'

'நீ கள்ளிப்பட்டி எறங்குனாலுஞ்சரி இங்கயே எறங்குனாலுஞ்சரி விருதுநகர் டிக்கெட்தான் போடுவேன்'

டிக்கெட் வாங்கும் போது அந்த பையன் திரும்பிப்பாத்தான். அவன் முகத்துல சின்ன நிம்மதி..

கள்ளிப்பட்டி பஸ்ஸ்டாண்டுல இருந்த ஒரே ஒரு ஆட்டோக்காரன் வந்து என்னோட பெரிய பேக்க எடுத்துகிட்டு 'யார் வீட்டுக்கு சார் போணும்'

'திருநவேலி போணும்'

ஆட்டோக்காரன் ஒரு தினுசா பாத்துக்கிட்டு 'இங்க திருநவேலி பஸ் நிக்காது சார், வேணுன்னா எதுத்த மாரி நில்லுங்க.. டவுன்பஸ் வரும்.. திருமங்கலம் போய் அங்க இருந்து திருநவேலி பஸ்ஸ பிடிங்க'

திருமங்கலம் டவுன்பஸ்சுக்காக நின்னுகிட்டு இருக்கேன். ரோட்டுக்கு அந்த பக்க டீக்கடெலருந்து அந்த பஸ்ல வந்த பெரியவர் என்ன உத்து பாத்துகிட்டே டீ குடிச்சுகிட்டு இருக்கார். இந்த பார்வையை அலட்சியபடுத்த முடிந்தது..

..

10 comments:

லோகு said...

நல்லா இருக்குங்க..

லோகு said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.. http://acchamthavir.blogspot.com/2009/05/32-32.html வந்து பார்த்து தொடருங்கள்...

கண்ணா.. said...

உங்களுக்கு முன்னமே ஒரு ஆளும் ரிசர்வ பண்ணிட்டாரா....?

பரவால்ல ரெண்டு பேருக்குமா சேர்த்து போட்டுருங்க...

தீப்பெட்டி said...

@ லோகு,
@ கண்ணா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
என்னாது? ..
32 கேள்வியா? சாய்ஸ் எல்லாம் இல்லியா?
நல்லவேளை கொஸ்டினாவது அவுட் பண்ணீங்களே...

அழைப்பிற்கு நன்றி பாஸ்.. சீக்கிரமே பதிலை பதிவா போடுறேன்..

vasu balaji said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

ராஜ நடராஜன் said...

கதை நீங்களா?அல்லது வேற யாராவதா?ஏன்னா ஜெயகாந்தன் வாடை வீசுது அதனாலதான் கேட்டேன்.

தீப்பெட்டி said...

@பாலா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@ராஜ நடராஜன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

//கதை நீங்களா?அல்லது வேற யாராவதா?//

அட.. நம்புங்கப்பா..

சிவக்குமரன் said...

good one

யசோதா.பத்மநாதன் said...

உங்களுடய வலைப்பூவின் தலைப்பு மிக நன்றாக இருக்கிறது.அதன் பொருள் மிகக் காத்திரமானது. அதன் வசீகரத்தில் தான் உங்களுடய பக்கத்திற்கு வந்தேன். உங்களுடய இந்தக் கதை இன்னும் அழகாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

இரண்டுக்கும்.

தீப்பெட்டி said...

@இரா.சிவக்குமரன்,
@மணிமேகலா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Post a Comment