Wednesday, May 20, 2009

மழை களவாடிய முத்தம்

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ...
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்...

மழை பெய்த மாலையில்
நான் கொடுத்த முத்தத்தை
மழை களவாடியதால்
நீ கண்ணீரால் துரத்தி
உன் கண்ணீரும்
என் முத்தமும்
முத்தக்கண்ணீராய்...

தவிக்கும் உதடுகளும்
தடுக்கும் மனதுமாய்
நான் கரம் பற்றி உரசுகையில்
அரவணைக்கும் கண்களும்
அதிர்கின்ற மேனியுமாய்
நீ சிரம் சாய்த்து
பற்றிக் கொள்கிறாய்...

பேசவே வாய்திறந்தேன்
பெருமூச்சாய் விட்டுவிட்டேன்
முத்தமிட உதடு குவித்தாய்
'உச்'சுக்கொட்டி விட்டு விட்டாய்..

அன்று மழையால் கரைந்த பொழுதும்
மழையில் தொலைத்த மனதும்
இன்று உன் குழந்தைக்கு
மழை காட்டும்போது
உறுத்துகிறது நிதர்சனமாய்...

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்..

..

16 comments:

வினோத் கெளதம் said...

Nanba..

send me ur lost blog id and mail id to my mail..

vin.gowtham@gmail.com

கண்ணா.. said...

-------------

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ...
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்...

-------------


கலக்கல் வரிகள்....

கவிதை முழுதும் அருமை...

தீப்பெட்டி said...

@ வினோத்,
நான் மெயில் அனுப்பிட்டேன் பாஸ்..
நன்றி..
@ கண்ணா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Suresh said...

//பேசவே வாய்திறந்தேன்
பெருமூச்சாய் விட்டுவிட்டேன்
முத்தமிட உதடு குவித்தாய்
'உச்'சுக்கொட்டி விட்டு விட்டாய்..//

நச் ;) சும்மா விளையாடுற கனேஷ் ... கவிதையில்

கார்த்திகைப் பாண்டியன் said...

தோற்றுப்போன காதலின் வலி..

தீப்பெட்டி said...

@ suresh,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

@ கார்த்திகை பாண்டியன்,
கருத்துக்கும் முதல் ஆளாய் பின்தொடர்ந்ததர்க்கும் ஸ்பெசல் நன்றி கார்த்தி ;-)

ஜெகதீசன் said...

கவிதை அருமை கணேஷ்.

தொடர்ந்து எழுதவும், கவிதை மட்டும் ;)

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகதீஸ்..

தொடந்து வாசிக்கவும் கவிதை மட்டுமல்லாமல் அனைத்தையும் ;)

பழமைபேசி said...

கரைதலும் உறைதலும்...சபாசு!

தீப்பெட்டி said...

வருகைக்கும், கருத்துக்கும், பின்தொடர்தலுக்கும் நன்றி பழமைபேசியாரே...

Anonymous said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல தமிழ்ர்களுக்கு மற்றும் இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.Tamilers.com.

நன்றிகள் பல...
தமிழ்ர்ஸ்
- இது தமிழ் பிளாகர்ஸ்கான தளம்

superlinks said...

hi

Venkatesh Kumaravel said...

காயங்களுக்கு களிம்பு தேடும் வார்த்தைகள். வாழ்த்துகள்... தொடர்ந்து எழுதவும்... உங்க வலைப்பூவும் பறிபோச்சா என்ன?

தீப்பெட்டி said...

@தமிழ்ர்ஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@superlinks,
வருகைக்கு நன்றி, ஆமா இது என்ன பின்னூட்ட டெஸ்டிங்கா..

@வெங்கி ராஜா,
கருத்துக்கும், பின்தொடர்தலுக்கும் நன்றி வெங்கி...

ஆமா பாஸ்.. என்னோட பிளாக்கும் போயே போச்சு ....

:(

கார்க்கிபவா said...

பழைய பதிவெல்லாம் பேக்கப் எடுத்து வச்சிருக்கிஙக்ளா இல்லையா சகா?

தீப்பெட்டி said...

இல்ல கார்க்கி..
அந்த பதிவெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு சகா..
:(

Post a Comment