தமிழகத்தில் 65 முதல் 68 சதவீதம்வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தீர்ப்பு மே-16 ல் தெரியவரும். அரசியல் விமர்சகர்கள் கருத்துகளின்படி மத்தியில் இழுபறியாகவே முடிவுகள் வரும். தமிழகத்திலும் பாதிக்குப்பாதி எதிர்கட்சி கைக்கு போகுமென தெரிகிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா அதிகமாகி இருந்தன் காரணம் ஆளுங்கட்சிக்கு திருமங்கலம் கொடுத்த பாடம். திருமங்கலத்தில் கொடுத்த பணமெல்லாம் ஓட்டாய் வந்து குவிந்ததன் விளைவுதான் இந்த தேர்தலிலும் பணத்தை வாரிஇறைத்தார்கள். விஜயகாந்த் திருமங்கல தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் ஓட்டை மட்டும் தே.மு.தி.க வுக்கு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் பணம் வாங்காதீர்கள் அது பாவப்பட்ட பணம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்தது. எங்கள் தொகுதியை பொறுத்தவரை பணப்பட்டுவாடா இருக்காது என்றே நினைத்தேன் வாரிசுகள் நிற்கும் முக்கிய தொகுதிகளில் மட்டும் தான் பணப்பட்டுவாடா இருக்குமென தவறாக நினைத்து விட்டேன். வீட்டில் அம்மாகூட தொலைபேசியில் பேசும் போதுதான் தெரிந்தது, எங்கள் பகுதியிலும் (விருதுநகர் தொகுதி) பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது ஒரு வோட்டுக்கு 150 ரூபாய் வீதம் கவரில் வைத்து அனைத்து வீட்டுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. சில வீடுகளில் 'பணமெல்லாம் வேண்டாம் நாங்க உங்களுக்குத் தான் ஓட்டளிப்போம்' என சொல்லியும் கேட்காமல் பணக்கவரை வீட்டினுள் வைத்து சென்றிருக்கிறார்கள்.
நான் கவனித்த இன்னொரு விசயம், ஈழ மக்கள் பிரச்சனையில் தி.மு.க மீது அதிருப்தி கொண்ட பழைய வாக்காளர்களும் கலைஞருக்காக தி.மு.க கூட்டணிக்கே ஓட்டளித்து இருப்பதாக கேள்வி.(இது லக்கி லுக் முன்பே சொன்னதுதான்) ஆரம்பத்திலிருந்து தி.மு.க விற்கு வாக்களிப்பவர்களால் சட்டென்று மாற முடியவில்லை. (இது எனக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்து அறிந்தது தமிழகத்தின் முழுஆய்வு அல்ல) 200 லிருந்து 500 வரை ஒரு வோட்டுக்கு பணமளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் எனது நண்பரின் வீட்டிலும்(கரூர்) வேண்டாமென்று சொல்லியும் ஓட்டுக்கு ரூ 200 வீதம் ஆளுங்கட்சியினர் வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தை விலை பேசும் இந்த போக்கு கண்டிக்கபட வேண்டியது அவசியம். துரதிஷ்டவசமாக இதை எதிர்க்க தார்மீகரீதியில் எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. எதிர் கட்சியிலிருப்பவர்களுக்கு தம்மால் அந்த அளவுக்கு பணம் தரமுடியவில்லை என்ற வருத்தம்தான் அதிகமாக இருக்கிறது. (நாளை ஆளும்கட்சியாகி பணவசதி வந்தால் அப்போது இந்த உத்தி உபயோகமாகுமே!)
இனிவரும் தேர்தல்களில் இந்திய ஜனநாயகம் இந்த பணநாயகர்களோடுதான் அதிகம் போராட வேண்டிவரும். இந்த விசயத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய ஊடகவியலாலர்கள் முக்கியப்பங்கு வகிக்க வேண்டியது அவசியம். பொதுவாக தமிழக பத்திரிக்கையாளர்கள் அத்தனை துணிச்சலானவர்கள் இல்லையென்பது எனது எண்ணம்.(இல்லையென்றால் இலைமறைகாயாக ஆனந்தவிகடனில் எழுத வேண்டிய அவசியமென்ன? இலங்கையில் சண்டே லீடர் ஆசிரியருக்கு இருந்ததைவிடவா ஆனந்தவிகடனின் ஆசிரியருக்கு இந்திய ஜனநாயகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது- ஒரு சோறு பதம்)
சமூகசீர்திருத்த ஆர்வலர்கள்தான் இந்த விசயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை எற்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசியல் வியாபாரிகள் இந்திய ஜனநாயகத்தை சுவிஸ் வங்கி லாக்கரில் பதுக்கிவிடும் அபாயமிருக்கிறது.

5 comments:
நண்பா என்னோடய ப்ளாக்க்கும் காணவில்லை..
அப்புறம் பப்புவின் ப்ளாக்..
என்ன ஆச்சு என்றே தெரியவில்லை..சிலரிடம் பேசி உள்ளேன்..
நீங்களும் பன்னுவது எப்படி என்று தெரிந்தால் சொல்லவும்..
My Mail Id..
vin.gowtham@gmail.com
விணோ மச்சான் என்னடா பிளாகே காணோம்
கணேஷ் அருமை உண்மைய உடச்சி எழுதிடிங்க
@வினோத்,
கட்டாயம் சொல்கிறேன்..
@சுரேஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//நண்பரின் வீட்டிலும்(கரூர்) வேண்டாமென்று சொல்லியும் ஓட்டுக்கு ரூ 200 வீதம் ஆளுங்கட்சியினர் வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.// அப்படியும் கரூர் ல ஜெயிக்கலையே.,
Post a Comment