Monday, May 25, 2009

தலைவரும் மீன்வலையும்

இலங்கை போர் நிறுத்ததிற்க்காக ஆறு மணிநேர திடீர் உண்ணாவிரதமிருந்தார் திமுக தலைவர். இன்று ஈழமக்கள் நடுக்கடலில் மாலுமியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் ஏதும் செய்வதாகவும் செய்தியில்லை. என்ன செய்யப்போகிறாரென்றும் தெரியவில்லை. முந்தைய நிகழ்வின் போது தொடர்ந்து தேர்தல் இருந்தது, ஆனால் இப்போது அப்படி ஒன்றும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏதும் நெருக்கடி வந்தால் இருக்கவே இருக்கிறார்கள் ஒருவாரமாய் போராடிப் பெறவிருக்கும் மத்திய அமைச்சரவைப் பதவிகள், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து விட்டு அதைச் சொல்லி சொல்லியே அறிக்கைகளில் தமிழினத்தலைவராகத் தொடரலாம். மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்த போதே ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால் (ஆறுமணி நேர உண்ணாவிரத்தினைத் தவிர). இனி அவர் சொன்னாலும் அவையெல்லாம் மத்திய அரசின் காதுகளுக்கு கேட்குமாவெனத் தெரியவில்லை. அது மட்டுமே அவர் மௌனத்திற்க்கு காரணமா? இல்லை ஈழமக்களுக்கு தமிழகத்தமிழர்கள் மத்தியில் ஆதரவில்லையென நினைக்கிறாரா? (ஓட்டு பெறாத விசயத்திற்கெல்லாம் போராட முடியுமா என்ன?)

ஒரு முல்லாக் கதை:

முல்லா ஊரில் நீதிபதிப் பதவி காலியானது. அரசர், ஏழையாய் இருந்து முன்னேறிய, பழசை மறக்காத, நேர்மையான ஒருவருக்குத்தான் நீதிபதி பதவியென அலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தார். அதை எப்படியோ தெரிந்து கொண்ட முல்லா மறுநாள் மீன் வலையோடு அரண்மனை வாசல் வழிச் சென்றார். அதைப் பார்த்த அரசன், முல்லாவை அழைத்து நமது ஊர்தான் கடலிலிருந்து 300 மைல் தொலைவில் இருக்குதே ஏன் மீன் வலையை சுமந்து கொண்டுச் செல்கிறாயெனக் கேட்க, முல்லாவும் அரசே நான் முன்பு மீன்பிடித்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் வாழ்ந்து வந்தேன். இப்போது வசதி வந்தாலும் தலைக் கனமில்லாமல் இருக்க இப்படி எப்போதும் மீன்வலையை சுமந்து கொண்டிருக்கிறேன்று சொன்னார். அரசரும் மகிழ்ந்து முல்லாவை நீதிபதியாக்கினார்.

சிலநாள் கழித்து அரசர் நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு முல்லா மீன் வலையில்லாமல் நீதிபதியாய் அமர்ந்திருந்தார். அரசனும் எங்கே மீன்வலையென்று கேட்க முல்லா சொன்னார், 'மீன்தான் பிடித்தாகிவிட்டதே! மீன்வலையெதற்கு?'

..

13 comments:

Kanna said...

//'மீன்தான் பிடித்தாகிவிட்டதே! மீன்வலையெதற்கு?'//

நல்லா கதை சொன்னீங்க...

ஆனா நாங்க கேட்கமாட்டோம் ... ரூவா வாங்கிட்டு கொள்ளைகாரனுக்குதான் குத்துவோம்..அப்புறம் புலம்புவோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

நெத்தியடி கதை.. நச்..

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

பழமைபேசி said...

கதை நல்லா சொல்றீங்க...

லோகு said...

கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாய்த்தான் மிதப்போம்..

தீப்பெட்டி said...

@ கண்ணா,
@கார்த்திகைப் பாண்டியன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்...

தீப்பெட்டி said...

@தமிழர்ஸ்
நன்றி பாஸ்.. ஓட்டு பட்டையை சீக்கிரமே இணைக்கிறேன்

@பழைமை பேசி,
நிஜமாவா சொல்றீங்க.. நன்றி பாஸ்..

தீப்பெட்டி said...

@லோகு,
வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் பின்தொடர்வதற்கும் நன்றி

கலையரசன் said...

தீபெட்டி என்னாச்சு உங்க பிளாக்கு?
அதுக்கு ஒரு தெனாலிராமன் கதை சொல்லுங்க!
அப்படியே,நம்ம பக்கங்களுக்கும் வாங்க

deva said...

vottu podarathukku evvalavu kaasu tharuveenga?

சொல்லரசன் said...

/மீன்தான் பிடித்தாகிவிட்டதே! மீன்வலையெதற்கு?'//

அதானே வேலை முடிந்தபின் துக்கி எறிவதுதான் ராஜதந்திரம்.

தீப்பெட்டி said...

@ கலையரசன்
//தீபெட்டி என்னாச்சு உங்க பிளாக்கு?//
அத தாங்க நானும் தேடிக்கிட்டு இருக்கேன் ..

@deva,
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி..
உங்க அக்கௌன்ட் நம்பர் தந்திங்கன்னா பணத்த போட்டுறலாம்

தீப்பெட்டி said...

@சொல்லரசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

Post a Comment