Wednesday, September 16, 2009

மொட்டை மாடி..


எத்தனை முறை
எண்ணிப் பார்த்தாலும்
எண்ணிக்கை
முற்றுப் பெறவில்லை

முழுக்க சிதறிய
நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி
விழி சோர்ந்தேன்..

தன் முந்தானையால்
என்னை மூடி
கையால் தட்டித்தட்டி
கதை சொல்கிறாள் பாட்டி..

இறந்தாலும் பெண்மனம்
நிம்மதியாய் இருப்பதில்லை
பகலில் பயந்திருந்தாலும்
இரவில் யமனுக்கு
போக்குக் காட்டி
நட்சத்திரமாய் வந்து
தமது பிள்ளைகளை
பார்க்கின்றனர் பெண்கள்

நூலிழையில் தொடர்பவிழ
நிகழ்காலத்தில் விழுந்து
சிதறிய நட்சத்திரங்களுள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கேயிருக்கிறாள் பாட்டி..

.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா இருக்கே.. :)

தீப்பெட்டி said...

@முத்துலெட்சுமி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Ashwinji said...

//நூலிழையில் தொடர்பவிழ
நிகழ்காலத்தில் விழுந்து
சிதறிய நட்சத்திரங்களுள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கேயிருக்கிறாள் பாட்டி..//

மிக அருமை.
அம்மாவையும் அப்பாவையும் நினைத்துக் கொண்டேன். கண்ணீர் வந்தது.
கவிதை தந்தது ஆனந்தம்.நன்றி.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Post a Comment