Saturday, September 5, 2009

என்ன செய்வது?

துரத்திக் கொண்டிருந்தேன்
தூரத்தில் அவள்..
களைத்து விழுந்தேன்
வியர்வையாய் வெளியேறின
உள் உறைந்த காமங்கள்..

களைத்த முகத்தில்
கூந்தலால்
குறுக்கு கோடிட்டாள்..
உயிர் தெளித்து
விழிதிறந்து எட்டிப்பிடிக்கையில்
அவள் இளஞ்சிரிப்பு மட்டும்
இமைகளுக்குள் சிக்கிக்கொண்டது..

சிரிப்பு தந்த குறிப்புகளை
சிதறாமல்
பிரதிகளெடுத்து
மூளை நரம்புகளின்
மூலைமுடுக்கெல்லாம்
சேமிக்க செய்தியனுப்பினேன்..

இன்னும் இமை திறக்கவில்லை..
விழியுள் உறைந்த
அவள் அடையாளத்தை
வெளியிட விருப்பமில்லை..
இப்படியே இறந்துவிடவும் சம்மதமே..

ஆனாலும் பயமிருக்கிறது
கண்தானம் செய்திருக்கிறேனே
மருத்துவர் யாரேனும்
வலிந்து இமை திறந்தால்..


.

13 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ன ரொம்ப நாளா ஆள காணோம்???

லோகு said...

மூளையிலே சேமித்த பின், கண் திறந்தால் வெளியேறிவிடும் என ஏன் நினைக்கிறீர்கள்..

அட்டகாச கவிதை அண்ணா..

ஷண்முகப்ரியன் said...

அருமை.

பிரியமுடன்...வசந்த் said...

எங்க போயிட்டீங்க கணேஷ் இவ்ளோ நாளா ஆளையே காணோம்?

//உயிர் தெளித்து
விழிதிறந்து எட்டிப்பிடிக்கையில்
அவள் இளஞ்சிரிப்பு மட்டும்
இமைகளுக்குள் சிக்கிக்கொண்டது..//

அது...செம்ம..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Ram said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

பழமைபேசி said...

வடிவாய் வார்த்தை மலர்கள்...வாழ்த்துகள்!

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

தீப்பெட்டி said...

@குறை ஒன்றும் இல்லை,

ஆமா ராஜ் குமார் ஒரு சின்ன ஆக்சிடெண்ட். கால்ல அடிப்பட்டு ஒரு மாசம் மருத்துவமனையில.. தொடர்ந்து இப்போ ஒரு மாசமா வீட்டுலனு ஓய்வெடுத்துட்டு இருக்கேன்.. (அதுக்கு முன்னடி என்ன பண்ணி கிழிச்சேன்னு கேக்காதிங்க..)

வருகைக்கு நன்றி..


@லோகு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..


@ஷண்முகப்ரியன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்..


@பிரியமுடன் வசந்த்,

கொஞ்ச நாளா சின்னவிபத்து காரணமா ஓய்வெடுக்க வேண்டியதாகிவிட்டது..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..

@பழமை பேசி,

பாரட்டிற்கு நன்றி பழமைபேசியாரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

சொல்லாம கொள்ளாம ஆள் காணாம போய்ட்டீங்கலேனு பயந்துட்டேன் நண்பா.. விபத்து என்று தெரிஞ்சு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. உடம்பப் பார்த்துக்கோங்க.. முடிஞ்சா உங்க அலைபேசி என்னை என்னோட மெயிலுக்கு அனுப்புங்க.. பேசலாம்..

கார்க்கி said...

//ஆமா ராஜ் குமார் ஒரு சின்ன ஆக்சிடெண்ட். கால்ல அடிப்பட்டு ஒரு மாசம் மருத்துவமனையில.. தொடர்ந்து இப்போ ஒரு மாசமா வீட்டுலனு ஓய்வெடுத்துட்டு இருக்கேன்.//

சகா என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்கிங்க?

ஜெகதீசன் said...

Welcome back ...

Post a Comment