Wednesday, September 23, 2009

எல்லாம் 'காந்தி'ய வழியில்..

காந்தியை விற்றே
பட்டம் வாங்கினேன்
வேலை வாங்கினேன்..

காந்தியை விற்றே
நிலங்களை வாங்கினேன்
சில நியாயங்கள் வாங்கினேன்..

காந்தியை விற்றே
காரியம்பல சாதித்தேன்
சாராயமும் குடித்தேன்..

ஆனால்
காந்தியை வாங்கித்தான்
திருமணம் செய்தேன்
ஓட்டும் போட்டேன்..

விற்கும்போது
சிரித்த காந்தி
வாங்கும் போதும்
சிரிக்கிறார்..

இன்னுமா சந்தேகம்
காந்தி
தேசப்பிதா தான்..

.

9 comments:

தமிழ் அமுதன் said...

//காந்தியை விற்றே
சில நியாயங்கள் வாங்கினேன்..//

சந்தேகம்...!
காந்தி தேசப்பிதா??????????

பழமைபேசி said...

ஆகா.... 500 உரூபாத் தாள் மட்டும்தான் கொடுக்கல் வாங்கலா? நல்லா இருக்கு!

ஷண்முகப்ரியன் said...

விற்கும்போது
சிரித்த காந்தி
வாங்கும் போதும்
சிரிக்கிறார்../
அருமை,நண்பரே.

கார்த்திகைப் பாண்டியன் said...

சுடும் கனலாய் வார்த்தைகள்..:-((

அப்பாவி முரு said...

இதெல்லாம் காந்திய வழியில்லை.,

காந் தீய வழிகள்

Anonymous said...

எளிமையான, ஆனாலும் பவர்ஃபுல் வரிகள்.

ரசித்தேன்... :)

தீப்பெட்டி said...

@ஜீவன்,
வருகைக்கு நன்றி..
இன்னுமா சந்தேகம் பாஸ்..

@பழமைபேசி,
தலைவரே! சரியா சொன்னிங்க..
வருகைக்கு நன்றி..

@ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்..

@கார்த்திகைப்பாண்டியன்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..

@அப்பாவி முரு,
உண்மைதான் பாஸ்.. ஆனால் இதுதான நடக்குது :(

@ஜெகதீஷ்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..

ஜோதிஜி said...

அருமை,நண்பரே // ரசித்தேன் //எளிமையான வரிகள்//

தீப்பெட்டி said...

@ஜோதிஜி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

Post a Comment