Wednesday, July 1, 2009

தூக்குவாளியும் மஞ்சப்பையும்..

'கணேஷ் போய் 3 புரோட்டா வாங்கிட்டு வர்றியா.. தூக்குவாளி கழுவி வச்சுருக்கேன் பாரு!.. அப்பா சட்டயில பணமெடுத்துக்கோ..' அம்மா சொல்லும் போதே வயர் கூடய தேட ஆரம்பிச்சுடுவேன். வயர் கூட தான் அப்பலாம் எனக்கு பிடிக்கும். 'சும்மா தேடிட்டு இருக்காம அந்த மஞ்சப்பைய எடுத்துட்டு போ' மஞ்சப்பை எல்லாம் 12 வயசு பெரிய மனுசனான எனக்கு கெளரவக் குறைச்சல் தான். எங்கள் வீட்டு அலமாரியில் மேல்தட்டின் ஓரத்தில் மஞ்சள் பைகள் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் எப்போதாவது செல்லும் பணக்கார வீட்டு கல்யாணத்திலும், துணி கடையிலும் கொடுக்கப்பட்டவையாக இருக்கும். அந்த மஞ்சள் பைகள் துவைத்தும் பயன்படுத்திய நாட்கள் நினைவில் இருக்கு. எனக்குப் பிடிச்ச வயர் கூடைகளை அத்தை பெண்கள் பின்னித் தருவார்கள். பள்ளி விடுமுறை காலங்களில் அவர்கள் வீட்டில் 2,3 வண்ணங்களில் 5,6 வயர் ரோல்கள் இருக்கும். வண்ணக் கலவையாக பின்னப்படும் அந்த வயர் கூடை எனக்கு சில வேளைகளில் பள்ளி செல்லவும் பயன்படும். அம்மாவோடு மார்கெட்டுக்கும், சொந்த பந்த வீடுகளுக்கும் பயணப்படும். செல்லும் வீடுகளிலெல்லாம் வயர் கூடை பின்னலைப் பற்றி கேட்காதவர்கள் இருந்ததில்லை (இருந்தாலும் அவர்களிடம் அம்மா அதை சொல்லாமல் வந்ததில்லை). காய்கறி வாங்கணுமா? துணிமணி வாங்கணுமா? டீ,பால்,ரோஸ் மில்க் வாங்கணுமா? கோயிலுக்கு போணுமா? எல்லாத்துக்கும் அன்னைக்கு தேதில எங்க வீட்டில் தூக்கு வாளியும் மஞ்சப்பையும் வயர்கூடையும் முக்கியம். அதே போல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய், சில்லு கருப்பட்டி யெல்லாம் பனை ஓலையில் செய்யப்பட்ட பேக்கிங்ல (அதுக்கு பேரு யாருக்காவது தெரியுமா பாஸ்) தான் வங்கிட்டு போவோம்.

இன்னைக்கு தூக்குவாளியையும் மஞ்சப்பையையும் சீந்த ஆளில்லை, எங்க போய் எவ்வளோ வாங்கினாலும் வீட்டிலிருந்து பணம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். சென்னையில் கரும்புசாறை கூட பாலித்தீன் கவரில் வாங்கிட்டுப் போறாங்க. நாம நோகாம நொங்கு தின்னுட்டுத்தான் இருக்கோம். ஆனா இது நம்ம வருங்கால சந்ததியினருக்கு எவ்வளோ பெரிய பாதிப்பை ஏற்பத்துமென்று நமக்கு தெரியவில்லை. மெத்த படித்த நம்மில் பலர் தெரியாதது போல் நடிக்க பழகிக் கொண்டுவிட்டோம். நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க புத்தியில்லை பொறுமையில்லை, ஆனால் அரசியல்வாதிகளை, நடிகர்களை குற்றம் சொல்ல பழக்கப்படுத்திக் கொண்டோம். நமது முப்பாட்டன்கள் நமக்காக கரடுமுரடான காடு, மலைகளை இரத்தத்தை வியர்வையாக சிந்தி திருத்தி பண்பட்ட விளைநிலங்களாக மாற்றிக் கொடுத்தனர், இன்று நாம் நமது வசதிக்காக நமது பேரப்பிள்ளைகளுக்கு சுகாதாரமற்ற உலகை விட்டுச்செல்லப் போகிறோம். முன்னோர்கள் நமது சுமையை குறைத்தார்கள், நாம் நமது சுமையையும் சேர்த்து நமது குழந்தையின் தலையில் இறக்குகிறோம். (மன்னிப்பே கிடையாதுடா கணேசா உனக்கு)

தொடர்புடைய இன்றைய செய்தி:

#ஆகஸ்ட் 15 முதல் மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களை விற்க, பயன்படுத்த தடை.(இந்த தடை காண்டத்திற்கும் பொருந்துமா?!)


சில கேள்விகள்:

1. தமிழகம் முழுதும் குறைந்த பட்சம் சென்னை முழுதும் இதை செய்தால் என்ன?
2. கட்டாய தலைகவசம் (ஹெல்மெட்) போல இதுவும் கைவிடப்படுமா?
3. காகிதப் பை, சணல் பை உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியமளித்து குறைந்த விலையில் கிடைக்கச்செய்தால் என்ன? ( சினிமாவோட கேளிக்கை வரியை ரத்து பண்ணுறத விட இது ரொம்ப நல்லது, காடுகள் அழியும் அபாயமும் இருக்கு இதுல)
4. தமிழகத்தில் பிளாஸ்டிக், காகிதம் மறுசுழற்சி முறை செய்யும் ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? அரசின் கவனம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறதா?

தொடர்புடைய பதிவுகள்:
1. சில அதிர்ச்சிகர உண்மைகள்
2. பிளாஸ்டிக் கலாச்சாரம்.

34 comments:

பிரசன்னா இராசன் said...

உண்மை!! உண்மை. கண்டிப்பாக கட்டாய தலைகவசம் போல இதுவும் கைவிடப்படும். சில நாட்களுக்கும் தள்ளுவண்டிகாரர்களிடம் மாமூல் வாங்குவதற்கு பயன்படும். ஆனால், நாம் எல்லோரும் சேர்ந்து முயன்றால் குறைந்த பட்சம் மெரீனாவையாவது சுத்தமாக வைக்கலாம். மறுசுழற்சி முறை சில நகராட்சிகளில் அமலில் உள்ளது. உதாரணம்: நாமக்கல் நகராட்சி. மிகப் பெரிய அளவில் தொடங்கப் பட்டது. இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை.

லோகு said...

அர்த்தமுள்ள பதிவு..
வார சந்தைக்கு ஒயர் கூடை எடுத்துக் கொண்டு சென்ற காலம் மாறி சூப்பர் மார்க்கெட்டில் எல்லாமே பிளாஸ்டிக்கில் கொடுக்கிறார்கள்..
ஒயர் கூடை பின்னுவது ஒரு கலை.. என் அக்கா மிக அழகாக பின்னுவார்கள்.. பள்ளி விடுமுறை நாட்களில் பெண்களுக்கு கைத்தொழிலாக இது இருந்தது..

ஒயர் கூடை, மஞ்சள் பை எல்லாமே வழக்கொழிந்து விட்டது.. ஜவுளி கடைகளில் கொடுத்து கொண்டிருந்த மூங்கில் கைப்பிடி கொண்ட பைகளையும் இப்போது தருவதில்லை.. எல்லாமே பிளாஸ்டிக் மயம்..

நையாண்டி நைனா said...

அண்ணே... நான் மும்பையிலே பால் வாங்க தூக்கு சட்டியை தான் பயன்படுத்துகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் மஞ்சப்பைப் போஸ்ட் போட்டேனே.. நல்ல போஸ்ட்..
“ நை.நை” பின்னூட்டத்தில் சொன்னா மாதிரி வடநாட்டில் இன்னமும் பால் வாங்க தூக்குச்சட்டி கலாச்சாரம் இருக்குங்க.. :)

Balaji said...

True govt should ban plastic bag from tamilnadau ASAP
VS Balajee

தீப்பெட்டி said...

@பிரசன்னா இராசன்,
@லோகு,
@நையாண்டி நைனா,
@முத்துலட்சுமி,
@பாலாஜி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

தீப்பெட்டி said...

நையாண்டி நைனாவும், முத்துலட்சுமி மேடமும் சொல்லுறதப்பாத்தா வட நாட்டுல நிலமை ரொம்பத் தேவல போல இருக்கே.. நாம தான் பிளாஸ்டிக் மோகத்துல இருக்கோம் போல.. டில்லில தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துனா 5 ஆண்டு சிறை தண்டனையாமே.. நல்ல விசயம்..

தமிழ்நாட்டுக்கு எப்போ விடுதலையோ இந்த பிளாஸ்டிக் சிறையிலிருந்து..

துபாய் ராஜா said...

பை பழக்கம் கைவிட்டு போகாத ஊர்கள் இன்னும் இருக்கின்றன.

சப்ராஸ் அபூ பக்கர் said...

அண்ணா உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டு. ஆனால் பின்னூட்டல் இடத் தான் நேரம் கிடைப்பதில்லை. மன்னிக்கவும்........... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அண்ணா.....

என்னோட வலைக்குள்ளும் கொஞ்சம் வந்து போங்க......

பிரியமுடன்.........வசந்த் said...

// அதே போல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய், சில்லு கருப்பட்டி யெல்லாம் பனை ஓலையில் செய்யப்பட்ட பேக்கிங்ல (அதுக்கு பேரு யாருக்காவது தெரியுமா பாஸ்) தான் வங்கிட்டு போவோம்.//

நாங்களும்தான்

அவசியமான பதிவு

TAMIZHAN said...

THANK YOU FOR THE VALUABLE ENVORMENTAL ARTICLE. IN TUTUCORIN DISTRCT, STILL THEY USE PALMLEAF FOR PACKING PALM JAGGERY. CRIMATION IS FRIENDLIER ENVIRONMENTALLY THAN BURIAL I COME TO UNDERSTAND THAT INSTEAD OF USING WOODEN COFFINS, THEY USE BASKETS.

babu said...

mmmm.... the government ???????????????


i hope kamaraj will come again.......


all politician have foresight about their grangrand children not public..........

Anbu said...

நல்ல பதிவு அண்ணா..

தீப்பெட்டி said...

@துபாய் ராஜா,
@சப்ராஸ் அபூ பக்கர்,
@வசந்த்,
@தமிழன்,
@பாபு,
@அன்பு,

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

இது நம்ம ஆளு said...

முன்னோர்கள் நமது சுமையை குறைத்தார்கள்,நாம் நமது சுமையையும் சேர்த்து நமது குழந்தையின் தலையில் இறக்குகிறோம்.

உண்மை

Anonymous said...

nalla valai pathivu.
Sila santhegangal enaku!
Wire koodai plastic illaya?
Kaagitha pai thayaripuku marangal vetta paduvathillya?

Plastic pai ubayoga paduthuvathil thavarillai, athu ubayoga padutha elithaga ullathu. Aanal athai sariyaga naam marusularchi seiyya vendum enabathe enathu karuthu.

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருதுக்கும் நன்றி இது நம்ம ஆளு..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி,

//Wire koodai plastic illaya?//
நல்ல வயர்கூடை குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும், ஆனால் 10 ஆண்டுகள் நாம் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்களை எண்ணிப் பாருங்கள்..

//Kaagitha pai thayaripuku marangal vetta paduvathillya?//

உண்மைதான்.. அதையும் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
//காடுகள் அழியும் அபாயமும் இருக்கு இதுல)//
ஆனால் அதன் மறுசுழற்சி முறையை ஊக்குவிக்க வேண்டும்..

//athai sariyaga naam marusularchi seiyya vendum//

உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதே..

பிளாஸ்டிக் கழிவுகளை வகைப்படுத்தி பிரித்து மாநகர் குப்பைதொட்டியில் வழ்ங்கினாலோ அல்லது பழைய பிளாஸ்டிக் விலைக்கு வாங்குபவர்களிடம் போட்டால் மட்டுமே மறுசுழற்சி சாத்தியமாகும்..

பிளாஸ்டிக்கிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்.. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத பிளாஸ்டிக் போன்றவைகளும் உள்ளன. அதைப் பற்றிய விழிப்புணர்வை அரசும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்..

Anonymous said...

சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.

அறியாமையே பலருக்கு அமைதியை தந்துவிடுகிறது.அறிவுபெற்று சிந்திப்பவர்களே கவலைப்படுகிறார்கள். அதில் நீங்களும் ஒருவர்.

வாழ்த்துக்கள்.
Hariharan-Doha

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஹரன்..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுக்கை நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//இன்று நாம் நமது வசதிக்காக நமது பேரப்பிள்ளைகளுக்கு சுகாதாரமற்ற உலகை விட்டுச்செல்லப் போகிறோம். முன்னோர்கள் நமது சுமையை குறைத்தார்கள், நாம் நமது சுமையையும் சேர்த்து நமது குழந்தையின் தலையில் இறக்குகிறோம். (மன்னிப்பே கிடையாதுடா கணேசா உனக்கு)//

உண்மைதான்

ஆ.ஞானசேகரன் said...

//#ஆகஸ்ட் 15 முதல் மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களை விற்க, பயன்படுத்த தடை.(இந்த தடை காண்டத்திற்கும் பொருந்துமா?!)//

இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிரீங்க

கார்க்கி said...

//(இந்த தடை காண்டத்திற்கும் பொருந்துமா?!)//

மெரீனா பீச்சுல இதுக்கு என்ன வேலை தலைவரே?

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஞானசேகரன்,

@கார்க்கி,

//மெரீனா பீச்சுல இதுக்கு என்ன வேலை//

அது என்னமோ தெரியல சகா, பீச்சுக்கு போகும் போதெல்லாம் குப்பையோட குப்பையா 'அது'வும் நிறைய கெடக்குது..

இது நம்ம ஆளு said...

வருகைக்கு நன்றி
இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறோம்.

ராஜ நடராஜன் said...

நல்லா தலைப்பும் வெச்சு அதுக்குள்ள நல்ல சரக்கையும் வெச்சும் கண்ணுல தீப்பத்திகிட்டது இன்றைய செய்திதான்.தடைக்காக வேண்டிதான் காண்டம்.அதுக்கும் தடையான்னு கேள்வி கேட்கிறது நல்லாயில்ல!எத்தனை தடை போட்டும் இந்தியாவுல ஏக மகசூல் விளைச்சல் போங்க!

ராஜ நடராஜன் said...

சில கார்பரேட் கம்பெனிகள் மறுசுழற்சி முறையில் பேப்பர் பைகளில் விற்பனைப் பொருட்களை தருகிறார்கள்.உதாரணம் கெண்டைக்கால் கோழிக் கம்பெனி.இருக்கியா எனும் இக்கியா சுவிஸ் கம்பெனி போன்றவை.

sgramesh said...

Sirippupolice: ரொம்ப நன்றி. தொடர்ந்து ஆதரியுங்கள். எழுத்து பிழையை சரி செய்கிறேன்.

அன்புடன் அருணா said...

அருமையான அவசியமான பதிவு...பூங்கொத்து!

சந்ரு said...

உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

புடிச்சிருக்கோ இல்லையோ.. படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ...

http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_19.html

rajhkumar said...

thamileezhaththil,ellakkadalilume kadathaasip paikal than.(vanniyil maddum)..panaiyolaiyil seyyappadda paikalai yazhppaanaththil "pari"enru solvaarkal.

Anonymous said...

// பனை ஓலையில் செய்யப்பட்ட பேக்கிங்ல (அதுக்கு பேரு யாருக்காவது தெரியுமா பாஸ்) தான் வங்கிட்டு போவோம். //

அதுக்கு பேரு ஓலைக் கொட்டான்.

Ashwinji said...

சமூகப் பிரக்ஞையுடன் கூடிய பதிவு. வெட்டி அரட்டைகளுக்கு மத்தியில் கோட்டான்கள் கூவும் காட்டில், காதில் பாய்ந்த இன்பத் தேன்.

//காண்டம்// இதக்கு தடை போடாதீங்க. எய்ட்ஸ், மற்றும் மக்கள் தொகை பெருக்கம், தேவையில்லாத கருக்கலைப்புகள் போன்றவற்றை தவிர்க்க தேவை காண்டம்.

ப்ரீயா இருக்கும் போது வருக என் வலைப்பூவுக்கு
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Post a Comment