Thursday, October 29, 2009

உள்ளுரசும் நினைவு

தேயத் தேய நடந்தாலும்
தேய்ந்த பின்னும்
மிஞ்சுகிறது..
உன் நினைவு போல
பாத ரேகை..

************"************"************"*************"*****

பெஷாவரில் குண்டுவெடிப்பு..
ஆள் தோட்ட பூபதி நானடா..
மானாட..
மச்சி சொல்லு மயிலாட..
ஆணியே புடுங்க வேணா..
முதலையின் முதுகில் ட்ரான்ஸ்மிட்டர்..
நறுக்கிய வெங்காயம் ஒரு கப்..
எத்தனை தாவினாலும்

வெயில் நேர மின்விசிறியால்
விரட்ட முடியாத
வியர்வை பிசுபிசுப்பாய்
உன் நினைவு..

************"************"************"*************"*****

உன்னிடம் பேச நினைத்த
பேச்சுக்களெல்லாம்
உள் நாக்கில்
தூக்கு போட்டு
தொங்கிக் கொண்டிருக்கிறதே..
எப்போது துப்புவது?
எப்படி துப்புவது?

************"************"************"*************"*****

காய இருந்த துணி
ஆற்று மண்ணில் விழுந்தால்
உதறி காய வைக்கலாம்
கரிசல் மண்ணில் விழுந்தால்
அலசி காய வைக்கலாம்

கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்

************"************"************"*************"*****

நண்பன் சொன்னான்
உன்னை பிரிந்த பின்புதான்
என் முகம் பொலிவிழந்ததாய்..
அவனுக்குத் தெரியாது
உன் நிழலை
நான் சுமப்பது..

.

14 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்//

கண்டிப்பா

பிரபாகர் said...

//உன்னிடம் பேச நினைத்த
பேச்சுக்களெல்லாம்
உள் நாக்கில்
தூக்கு போட்டு
தொங்கிக் கொண்டிருக்கிறதே..
எப்போது துப்புவது?
எப்படி துப்புவது?//

அருமைங்க.... தமிழ்மணத்துல உங்க ஓட்டையும் போடுங்களேன்...

பிரபாகர்.

க.பாலாசி said...

//வெயில் நேர மின்விசிறியால்
விரட்ட முடியாத
வியர்வை பிசுபிசுப்பாய்
உன் நினைவு..//

//கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்//

இந்த வரிகளை மிக ரசித்தேன்.

கவிதைகள் அனைத்தும் அருமை....

லோகு said...

தலைவா.. சூப்பர் தலைவா.. ரொம்ப நல்லாருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

//தேயத் தேய நடந்தாலும்
தேய்ந்த பின்னும்
மிஞ்சுகிறது..
பாதரேகை போல
உன் நினைவு..//

ஆரம்பமே அசத்தல்

ஆ.ஞானசேகரன் said...

நான்காவது சூப்பர்

அப்பாவி முரு said...

அண்ணா, முடியலை...

சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடுங்க.

vasu balaji said...

அபாரம். பாராட்டுக்கள்.

பின்னோக்கி said...

சூப்பர்

சிவாஜி சங்கர் said...

நல்லாயிருக்கு கவிதை...

Anonymous said...

// அண்ணா, முடியலை...
// சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடுங்க.

நான் இதை வழிமொழிகிறேன்!!!

ஷண்முகப்ரியன் said...

யார் நீங்கள் கணேஷ்? உங்கள் கையெங்கே? எழுதியது உங்கள் மனமென்றாலும் என்னால் குலுக்க முடிவது உங்கள் கைகளைத்தானே?

தீப்பெட்டி said...

@ நன்றி வசந்த்,

@ நன்றி பிரபாகர்,

@ நன்றி க.பாலாசி,

@ நன்றி லோகு,

@ நன்றி ஞானசேகரன்,

@ நன்றி அப்பாவி முரு,(அவ்ளோ சீக்கிரம் தப்பிச்சுரலாம்னு நினைக்குறீங்களா)

@ நனறி வானம்பாடிகள் பாலா சார்

@ நன்றி பின்னோக்கி,

@ நன்றி சிவாஜி சங்கர்,

@ நன்றி அருணா,

@ நன்றி ஜெகதீஷ்,

@ நன்றி ஷண்முகப்ரியன் சார்

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

//காய இருந்த துணி
ஆற்று மண்ணில் விழுந்தால்
உதறி காய வைக்கலாம்
கரிசல் மண்ணில் விழுந்தால்
அலசி காய வைக்கலாம்

கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்//

அருமை!
தீக்குச்சியால் நிச்சயம் காதல் பற்றிக் கொள்ளும்.

Post a Comment