Wednesday, October 7, 2009

உலகம் மீதம் உள்ளது..

உன்னையும்
உன் நினைவுகளையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

மனப்பாறை மீது
மயக்க அலையாய் மோதி
மணல் பாதையாய் மாற்றிய
உன்னை விடவும்
உயர்வாய் சில விசயங்கள்
உள்ளன உலகில்..

உலகில் உள்ள
ஒலியெல்லாம்
உன் பெயரின் உச்சரிப்பாய்
உணர்ந்த நானே
இதையும் சொல்கிறேன்
இதயம் திறந்து சொல்கிறேன்..

என் கனவுகளை
உன் நினைவுகளோடு
உள்ளத்தில்
உறங்க வைத்து விட்டேன்..

ஊடுருவும்
விழிச்சொருகலையும்
உதட்டோர வளைவையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

-- 14/01/2000
(பழைய டைரியின் பரிகாசம்)

.

10 comments:

ஷண்முகப்ரியன் said...

உன்னையும்
உன் நினைவுகளையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..//

அருமை.அருமை,கணேஷ்.

அப்பாவி முரு said...

எனக்கு ஏதேதோ தோணுது...

கடைசி வரிகள் மட்டும் இல்லாவிடில், இழந்த தலைவனை நோக்கிய பாடலாக இருந்திருக்கும்...

ப்ரியமுடன் வசந்த் said...

//மனப்பாறை மீது//

உண்மையில் மனம் ஒரு பாறைதான்

சில நேரம் கனமாய் இருக்கும்போது

சில நேரம் சுக்கு நூறாய் இருக்கும்போது

கணேஷ் எங்க ஆளே காணோம் பிஸியா?

கார்த்திகைப் பாண்டியன் said...

உணர்வுகளை அருமையா வெளிப்படுத்தி இருக்கீங்க நண்பா

பழமைபேசி said...

தீப்பெட்டியார்.... இயல்பா இருக்கு...வாழ்த்துகள்!

Ashwinji said...

ஆஹா...

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

ஆ.ஞானசேகரன் said...

//ஊடுருவும்
விழிச்சொருகலையும்
உதட்டோர வளைவையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..//

பழசா இருந்தாலும் பக்குவமாக இருக்கு நண்பரே

ஊடகன் said...

//என் கனவுகளை
உன் நினைவுகளோடு
உள்ளத்தில்
உறங்க வைத்து விட்டேன்..//

நல்ல சிந்தனை...........
வாழ்த்துக்கள் ....... தொடருங்கள் நண்பரே........

புலவன் புலிகேசி said...

//உலகில் உள்ள
ஒலியெல்லாம்
உன் பெயரின் உச்சரிப்பாய்
உணர்ந்த நானே
இதையும் சொல்கிறேன்
இதயம் திறந்து சொல்கிறேன்..//

நல்ல வரிகள்........

தீப்பெட்டி said...

@ஷண்முகப்ரியன்,
@அப்பாவி முரு,
@வசந்த்,
@கார்த்திகைப்பாண்டியன்,
@பழமை பேசி,
@அஸ்வின்ஜி,
@ஞானசேகரன்,
@ஊடகன்,
@புலவன் புலிகேசி,

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.. நண்பர்களே..

Post a Comment