Monday, October 19, 2009

ஒரு காத்திருத்தலின் போது..

பழ கடைக்காரரின்
ஆர்வப்பார்வை
உதறி திரும்பினேன்..

வலப்பக்கம்
மகளுக்கு
மானாவாரியாய்
ஆலோசனைகளை
வழங்கும் வயதான தாய்..

இடப்பக்கம்
இந்திய ஜனநாயகத்தை
சரிபார்த்துக் கொண்டு
இருவர்..

இவர்களையெல்லாம்
சரி பார்த்துக்கொண்டு
நான் ?

பேருந்தின்
பேரிரைச்சலுக்கு
பின் கேட்டது
சிறகு விரித்த
சிரிப்புகள் சில..

பேருந்து நிறுத்தத்தில்
மண்பானைத் தண்ணீரா
தாகத்திற்கு பருகினேன்..

ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..

சிந்தனையின்
சிறகு பறித்து
கற்பனைக்கு
கடன் தந்தாள்..

சில நொடியில்
விழி சுழற்றி
வழி மறித்தாள்
அவள்
விழிவழி
கொஞ்சம் உலகம்
பார்த்தேன்..

இப்போதும்
பேருந்து வந்தது
ஆனால்
தென்றாலாய் நகர்ந்தது..

இப்போது நிறுத்தத்தில்
நான்
காலி மண்பானை
பழக் கடைக்காரரின்
பரிகாசப் பார்வை..

-- 06/04/2000
(பழைய டைரியின் பரிகாசம்)


.

9 comments:

வினோத் கெளதம் said...

அருமை ..அட்டகாசம்...

vasu balaji said...

/சிந்தனையின்
சிறகு பறித்து
கற்பனைக்கு
கடன் தந்தாள்../

அழகான வரிகள்.

ஷண்முகப்ரியன் said...

ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..//

நீங்கள் காதலித்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது காதலிக்கப் போகிறீர்களா?
எப்படி இருந்தாலும் ஒரு ச்க ரசிகனின் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

அழகாக இருக்கு நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//சில நொடியில்
விழி சுழற்றி
வழி மறித்தாள்
அவள்
விழிவழி
கொஞ்சம் உலகம்
பார்த்தேன்..//

அருமை...:-)))))

புலவன் புலிகேசி said...

//இப்போதும்
பேருந்து வந்தது
ஆனால்
தென்றாலாய் நகர்ந்தது..//

நல்ல ரசனை....

தீப்பெட்டி said...

@வினோத்,

//அருமை ..அட்டகாசம்...//

இதுல எதும் உள்குத்து, வெளிக்குத்து இல்லையே..
நன்றி வினோத்..

@வானம்பாடிகள்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..

@ஷண்முகப்ரியன்,
//நீங்கள் காதலித்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது காதலிக்கப் போகிறீர்களா?//
நான் எப்போதும் காதலித்துக் கொண்டிருக்கிறேன் சார்..
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி..

தீப்பெட்டி said...

@ஞானசேகரன்,
வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி பாஸ்..

@கார்த்திகைப்பாண்டியன்,
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பா..

@புலவன் புலிகேசி,
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி பாஸ்..

க.பாலாசி said...

//ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..//

நல்ல வரிகள் அன்பரே..மிக ரசித்தேன்....

Post a Comment