Monday, September 14, 2009

நடிகர் கெட்டால்..

ராணுவத்துல இருந்து ஓய்வுபெறுபவர்கள் என்ன பண்ணுவாங்க.. ஏதாவது ஒரு அரசாங்க அல்லது தனியார் அலுவலகத்தில் காவலாளியா இருப்பாங்க. ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் பக்கத்து வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு கட்டணம் வாங்கியோ வாங்காமலோ வகுப்பெடுப்பங்க, மத்தவுங்க எதாவது பெட்டிக் கடை வச்சு உக்காருவாங்க. சிலர் ஊர்ஊரா சுத்தி கடவுளத்தேடிட்டு இருப்பாங்க, பலர் வீட்டுல இருக்குறவுங்க பிரச்சனைய தலைல போட்டு உருட்டிட்டு இருப்பாங்க,

அந்த வரிசையில் நடிகர்கள் நல்லா சம்பதிச்ச பிறகு எப்போ நாம நடிச்சா நம்ம குடும்பமே உக்காந்து படம் பாக்க மாட்டங்கனு தெரிஞ்சவுடன் எடுக்கிற அடுத்த முடிவு எதாவது அரசியல் கட்சில சேருறதுதான். அவுங்க தகுதிக்கு ஏற்ப குவாட்டர்,பிரியாணி கட்சிப்பொது கூட்டங்களோ, எம்.எல்.ஏ,எம்.பி,மந்திரிப் பதவிகளோ கிடைக்கும். வாய்ஸ் இருக்குறவுங்க தனிக்கட்சி ஆரம்பிப்பாங்க. திரைத்துறையில வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள் அரசியல்ல வாரிசுகளை வளர்க்க முயற்சி பண்ணுவாங்க. 'ஏதோ கெட்டா குட்டிசுவரு' சொல்லுறது போய் இப்போலாம் 'நடிகன் கெட்டால் அரசியல்'னு தான் சொல்லுறாங்க.எது எப்படியோ நமக்கும் வயசான, செயல்படாத பஞ்ச் டயலாக் மட்டும் பேசத்தெரிந்த தலைவர்கள் கிடைப்பாங்க. அவுங்க ஒத்திகை இல்லாத நடிப்ப பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமையுமென்றாலும், அது எவ்வளவு கொடுமையானதென்று தமிழக மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு.

இப்படி போய்ட்டு இருந்த தமிழக அரசியல்ல கொஞ்ச நாளா ஒரு உண்மை கலந்த வதந்தி. விஜய் தனிக்கட்சி ஆரம்பிப்பார், இல்லை தேசிய கட்சியில் சேரப்போறார். கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாவும் எனக்கு கொஞ்சம் ஆர்வமாவும் இருந்தது. விஜயோட அரசியல் பிரவேசம் பற்றி நிறைய கருத்துகள் இருந்தது. பொதுவா அரசியலில் 'தாதா'க்களுக்கு அப்புறம் தாத்தாக்களுக்குத் தான் முதல் மரியாதை. நீங்க 'தாதா'வாவும் தாத்தாவாவும் இருந்தீங்கனா சீக்கிரமா ஏதாவது அரசியல் கட்சில சேருங்க. கூடவே திரைத்துறையில இருந்தீங்கனா தைரியமா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.

இந்தியாவில் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுவதை அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ யாருமே விரும்புவதில்லை, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போறாருனதும் நிறைய எதிர்கருத்துகள், திரைத்துறையில் அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்குனும் இன்னும் சில நூறுகதாநாயகிகளுடன் தயிர்சாதம் ரெடி பண்ண வேண்டுமென கூக்குரல்கள். ஆதரவு தரப்பிலிருந்துதான் இந்த கருத்துகள்னு பார்த்தா எதிர்தரப்பிலும் அதே கருந்துகள் தான். இங்க என்ன கிழிச்சுட்டாருனு அங்க போய் கிழிக்கப்போறார்னு கேட்குறாங்க. சரி அப்போ இங்க இருந்து கிழிச்சுட்டே போறேனு அவரும் வடுமாங்கா ஊறல தேடி போய்ட்டார். சினிமா தப்பிச்சதுனு(காமெடி கீமெடி பண்ணலியே) சிலரும், அரசியலும் தப்பிச்சதுனு சிலரும் சொல்லுறாங்க, எது தப்பிச்சதுனு போகப்போக தெரியும்.

எப்படியோ 60 வயசுல விஜய் அரசியல குதிப்பார்னு நம்பலாம். அதுவரை அவரோட அப்பா ஏதாவது கட்சில சேர்ந்து பயிற்சி எடுத்துக்கலாம். நமக்கு இன்னுமொரு தாத்தா தலைவர் தயாராகிறார்.

ஒரு குறள்:

'ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்து படும்'

குறள் விளக்கம்:

முறையாக செய்யப்படாத முயற்சியானது எத்தனை பேரின் துணையிருந்தாலும் இறுதியில் முடங்கிப் போய்விடும்.


ஒரு முல்லா கதை:

மனைவி இறந்து விட்டதால் 60 வயதில் மறுமணம் செய்யபோவதாக முல்லா தன் நண்பர்களிடம் சொன்னார். நண்பர்களெல்லாம் 'காலம் போன காலத்துல சும்மா வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோமின்னு இருக்காமா, கல்யாணம் அவசியம்தானா?' கேட்டாங்க.
முல்லாவும் 'வயசான காலத்துல வாய்க்கு வக்கனையா கொஞ்சம் சாப்பிட்டு சாகலாம்னுதான் கல்யாணம் பண்ணிக்குறேன்'னு சொன்னார். உடனே நண்பர்கள் 'வர்றவ மோசமானவளா இருந்து சரியா சமைச்சுப் போடாம இருந்தா என்ன பண்ணவீங்க'னு சொல்ல, உடனே முல்லா சொன்னார் 'அவள் கூட இருக்கப்போறது கொஞ்ச நாள் தானேனு மனச தேத்திக்கிட்டு இருப்பேன்'


.

7 comments:

லோகு said...

இங்க கணேஷ் ன்னு ஒரு விஜய் ரசிகர் இருந்தார்.. அவரை யாராவது பார்த்திங்களா..

வினோத் கெளதம் said...

கணேஷ் வித்தியாசமான கோணத்தில் எழுதி உள்ளிர்கள்..

அப்பாவி முரு said...

நடிகர்களுக்கு வெளிச்சம் இருந்துக்கிட்டே இருக்கணும்.

அதுக்காக ஏதாவது செய்யணும், அதுக்கு அரசியல் நல்ல களம்...

தீப்பெட்டி said...

@லோகு,

நான் இப்பவும் விஜய் ரசிகன்தான் லோகு, யாராயிருந்தாலும் ஓய்வுகால பொழுது போக்கா அரசியல பயன்படுத்துறதுல எனக்கு உடன்பாடு இல்லை.

விஜய் போன்ற இளைஞர்களை கவர்பவர்கள் அரசியலில் ஈடுபட தயங்குவது தமிழகத்தின் துரதிஷ்டமே..
(இங்கு நான் வெற்றி தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை)

தீப்பெட்டி said...

@வினோத்,
@அப்பாவி முரு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜோதிஜி said...

விஜய் குறித்து பல விஷயங்கள் யோசிப்பதுண்டு. உங்களின் தொடக்க வரிகளை இயல்பாக படித்தேன். குறள் மூலம் உணர்த்திய உணர்வுகளை ஆச்சரியத்துடன் படித்து முல்லா கதையை வாய்விட்டு சிரித்து முடித்தேன். திரைப்பட உலகில் அத்தனை பேர்களின் பங்களிப்புகளையும் மூவீயாலயா என்ற தொடக்க எடிட்டிங் கருவி மூலம் நறுக்குவதை நேரிடையாக பார்த்தவன் இன்று ஒரு சிறிய விஷயத்தை எப்படி கோர்த்து முடித்து உள்ளீர்கள் என்பதை வியப்பாய் உள்வாங்கினேன். வேறென்ன. வெகு அற்புதம்.

தீப்பெட்டி said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி..

Post a Comment